இந்திய ஐடி நிறுவனங்கள் அதிகளவில் பயன்படுத்தி வரும் எச்1பி விசாவை பெறுவதற்கான கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியுள்ளது டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு.
அமெரிக்காவின் பாதுகாப்பை நிலைநாட்ட 7 நாட்டு முஸ்லிம் மக்களுக்கு இந்நாட்டில் நுழைய தடை விதித்துச் சில நாட்களே ஆன நிலையில், அதிபர் டொனால்டு டிர்ம்ப் எச்1பி விசா மீது புதிய கட்டுப்பாடுகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்திய ஐடி நிறுவனங்கள் அதிகளவில் பயன்படுத்தி வரும் எச்1பி விசாவை பெறுவதற்கான கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியுள்ளது டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு.
இதன் மூலம் இனி ஐடி ஊழியர்களின் அமெரிக்கக் கனவும் வெறும் கனவாகவே இருக்கப்போகிறது.
புதிய கட்டுப்பாடுகள்
இந்திய ஐடி நிறுவனங்கள் அதிகளவில் பயன்படுத்தி வரும் எச்1பி விசா பெற ஒரு ஊழியர் குறைந்தபட்சம் 1,30,000 அமெரிக்க டாலர் (8,840,000 ரூபாய்) அளவிற்குச் சம்பளம் வாங்க வேண்டும் என அறிவித்துள்ளது.
தற்போது இதன் அளவுகள் வெறும் 60,000 டாலராக உள்ளது. இந்திய ரூபாய் மதிப்பின் படி 4,080,000 ரூபாய் புதிய கட்டுப்பாடுகள் மூலம் குறைந்தபட்ச சம்பள அளவுகளை விடச் சுமார் 2 மடங்கு அதிகமாக உள்ளது.
இப்புதிய கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்புகள் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
குறைந்த சம்பள ஊழியர்கள்
இப்புதிய விசா கட்டுப்பாடுகள் மூலம் இனி அமெரிக்காவில் குறைந்த சம்பளத்தில் ஊழியர்களைப் பணியில் அமர்த்த முடியாது. விசா விண்ணப்பம் அளிக்க வேண்டும் என்றால் கூட 130,000 டாலருக்கு அதிகச் சம்பளம் வாங்குபவராக இருந்தால் மட்டுமே விசா பெற விண்ணப்பம் பரிசீலனை செய்யப்படும்.
இந்திய ஐடி நிறுவனங்கள்
அமெரிக்க அரசின் புதிய கட்டுப்பாடுகள் மூலம் இந்திய ஐடி துறையில் முக்கிய நிறுவனங்கள் மும்பை பங்குச்சந்தையில் அதிகளவிலான சரிவை சந்தித்தது.
செவ்வாய்க்கிழமை மதியம் 1 மணியளவில் மும்பை பங்குச்சந்தையில் இன்போசிஸ் 3.18 சதவீதமும், டிசிஎஸ் 4.68 சதவீதமும், விப்ரோ 2.65 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
முக்கிய அறிவிப்புகள்
அமெரிக்கா எச்1பி விசா மீதான சம்பள உயர்வுகளை மட்டும் அல்லாமல் பல முக்கிய அறிவிப்புகளை அறிவித்துள்ளது.
1. நிரந்தரச் சம்பளத்தில் அளவிற்கு 200 சதவீதம் அதிகச் சம்பளம் அளிக்கும் நிறுவனங்களுக்கு எச்1பி விசா வழங்கப்படும்.
2. மேலும் எச்1-பி விசாவின் டிபென்டென்ட் ஊழியர்களுக்கு இப்புதிய அடிப்படை சம்பள உயர்வு பொருந்தாது எனவம் அறிவிக்கப்பட்டுள்ளது.
3. அமெரிக்காவின் மொத்த எச்1பி விசாவில் 20 சதவீகம் சிறு மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவன ஊழியர்களுக்கு வழங்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. (50க்கும் குறைவான ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள்).