தமிழில் களவாணி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஓவியா, திரைப்படங்களில் நடித்ததை விட பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரிய அளவில் பிரபலமானார்.
பிக்பாஸ் சீசன் 1-ல் கலந்து கொண்ட ஓவியாவிற்கு அதிகப்படியான ரசிகர்கள் குவிந்தனர் என்றே கூறலாம்.
மேலும் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படங்கள் எதுவும் ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை. இதனால் அதிகமான திரைப்படங்களில் நடிகை ஓவியாவை பார்க்கமுடியவில்லை.
இந்நிலையில் தற்போது ஓவியா அவரின் ட்விட்டர் பக்கத்தில் புடவையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
நீண்ட நாட்களாக எந்த ஒரு புகைப்படத்தையும் பதிவிடாமல் இருந்து வந்த ஓவியா தற்போது வெளியிட்டுள்ள போட்டோ ரசிகர்களை கவர்ந்துள்ளது.
SOURCE-
Cineulagam