சென்னை மேடவாக்கத்தில் தெருவில் நின்ற பெண் நாயை ஒருவர் பலாத்காரம் செய்வதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சிலர், புளூகிராஸ் பொதுமேலாளர் டான் வில்லியம்சுக்குத் தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அந்த இடத்துக்குக் காவல்துறையினரோடு விரைந்து சென்ற வில்லியம்ஸ், பலாத்காரத்துக்கு உள்ளான நாயை மீட்டு வேப்பேரி கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்குப் பரிசோதனை செய்ததில் அந்த நாய் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து நாயைப் பலாத்காரம் செய்தவர் மீது பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புளூகிராஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் அவரைப் பிடித்து விசாரித்தபோது அவர் திண்டுக்கல்லைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் முருகன் எனத் தெரியவந்தது.
இதையடுத்து அவர் மீது இயற்கைக்கு மாறாக உடலுறவு கொள்ளுதல் என்ற சட்டத்தின் படி பிணையில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.